அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை சொத்துகள் மற்றும் வங்கிப் பணம் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி அறிவிப்பு…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை சொத்துகள் மற்றும் வங்கிப் பணம் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி அறிவிப்பு…

சென்னை;

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக உதயநிதி அறக்கட்டளை நிர்வாகி மற்றும் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில் கிருத்திகா உதயநிதியின், 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்திவரும் நிலையில், தற்போது அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply