கிளம்பு கிளம்பு .. ஒரு புடி மண்ண அள்ள முடியாது… வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் கரூர் எங்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்..அதிகாரிகள் அதிர்ச்சி.

கிளம்பு கிளம்பு .. ஒரு புடி மண்ண அள்ள முடியாது… வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில்  கரூர் எங்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்..அதிகாரிகள் அதிர்ச்சி.

கரூர்:

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கிளம்பு கிளம்பு அந்து போச்சு என்றும் இது காலா கில்லா எனவும் வாசகம் அச்சிடப்பட்டுள்ள போஸ்டரில் இங்க இருந்து ஒரு புடி மண்ண கூட எடுத்துகிட்டு போக முடியாது என வருமான வரித்துறையினரை மிரட்டும் வகையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

காலா திரைப்படத்தில் வரும் ரஜினிகாந்த் கெட்டப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமர்ந்திருப்பது போன்றும் அவருக்கு அருகே புலி ஒன்று உருமிக் கொண்டு நிற்பதை போன்றும் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கரூர் திருமாநிலையூரை சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சியையும் ,கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது …

Leave a Reply