‘மூச்சு இருக்கா? மானம் ? ரோஷம்? .. அடேய் பொறுக்கி… அறிவாலயத்துல போய் ஒளிஞ்சுக்கோ… தமிழக அமைச்சர் vs அமர்பிரசாத் ட்விட்டர் தாக்குதல்…

சென்னை;
டெல்லியில் நேற்று புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் காந்தி சிலை அருகே பூஜைகள் நடைபெற்றன. இதில் பிரதமர் மோடி உள்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அனைத்து மதப் பிரார்த்தனைகளும் மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வேத மந்திரங்கள் முழங்கின.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன் அடையாளமாக ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளின் திரைகளை விளக்கினார்.
மக்களவை சபாநாயகர் இருக்கும் அருகே பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்ட செங்கோலை நிறுவும் நிகழ்ச்சி காலை 8.30 மணி அளவில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் திருவாடுதுறை ஆதினம் அம்பலமான தேசிக பரமாச்சாரியார் தலைமையில், ஆதீனங்கள் 21 பேர் அணிவகுத்து பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கி அந்த செங்கோலை அவரிடம் கொடுத்தனர்.
பின்னர் அந்த செங்கோலைப் பிரதமர் மோடி ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களவை சபாநாயகர் இருக்கையின் வலது புறம் உள்ள கண்ணாடி பெட்டியில் நிறுவி தரையில் விழுந்து வணங்கினார்.
இந்த புகைப்படத்தை விமர்சித்து தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில்’ மூச்சு இருக்கா?? மானம் ?? ரோஷம் ?? எனப் பதிவிட்டு இருந்தார்.
அமைச்சரின் ட்விட்டர் பதிவை விமர்சித்து தமிழ்நாடு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில், அடேய் பொறுக்கி மனோ தங்கராஜ் ஒழுங்கா நாளைக்கு அறிவாலயத்தில் போய் ஒளிஞ்சிக்க எனப் பதிவிட்டு இருந்தார்.
தற்போது இந்த பதிவுகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.