ஜப்பான் டீசர் 30 மில்லியன் பார்வை யாளர்களை கடந்து சாதனை !!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கார்த்தி பிறந்த நாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜப்பான் பட டீசரை படக்குழு வெளியிட்டது. இதனை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். ‘ஜப்பான்’ மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஜப்பான் டீசர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த டீசர் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.