அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது !!

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது !!

இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது (IIFA 2023) வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த பிரமாண்ட விழாவில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. நடிகர் கமலுக்கு இந்த விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார்.

இந்நிகழ்வில் நடிகர் கமல், மணிரத்னம் இயக்கும் தனது 234வது படம் குறித்து பேசியுள்ளார். தனது 234வது படத்தின் மீது ரசிகர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பு சற்று பதற்றமடைய வைப்பதாகவும், படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், எங்களது கூட்டணியின் முதல் படமான நாயகன் படத்தில் பணியாற்றியதை போன்று கூலாக உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply