கவிஞர் வைரமுத்து மீது 19 பாலியல் குற்றச்சாட்டு உள்ளது … இதுவரை 1 எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாதது ஏன்? அண்ணாமலை கேள்வி…

சென்னை;
டெல்லியில் நேற்று நடைபெற்ற புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது தங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை வலியுத்தி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே மல்யுத்த வீரர்கள் கைது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை;
கவிஞர் வைரமுத்து மீது இதுவரை 19 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஒருமுறை கூட அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் டெல்லியில் மல்யுத்த விராங்கனைகளில் குற்றச்சாட்டுகளில் பாஜக எம்.பி மீது 2 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்தால் தான் அது குறித்து பேசுவேன் என்பது தவறான ஒன்று.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.