5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது ”சென்னை சூப்பர் கிங்ஸ்”!

5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது ”சென்னை சூப்பர் கிங்ஸ்”!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பில்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. குறிப்பாக தமி

ழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் 47 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 96 ரன்களை சர்வ சாதாரணமாக விளாசினார். இது கூடுதல் பலமாக அமைந்தது.

இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே மழையின் காரணமாக ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. பின்னர் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நடுவர்கள் அறிவித்த நிலையில் மீண்டும் ஆட்டம் நள்ளிரவு 12:10 மணிக்கு தொடங்கியது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவன் கான்வே நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். ருதுராஜ் 26 ரன்களும், கான்வே 47 களும் ரன் எடுத்த நிலையில் நூர் அகமது பந்தில் அடுத்தடுத்து விக்கெட் இழந்தனர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் , இரண்டு பவுண்டரிகள் அடித்து 27 ரன்களை குவித்தார். கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்ட து.

அம்பத்தி ராயுடு 19 ரன்களை குவித்தார். இருப்பினும் மோஹித் சர்மா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.வெற்றிக்கு 14 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்று நிலையில் மிகப்பெரிய ஆரவாரத்துடன் தோனி களமிறங்கினார். ஆனால் முதல் பந்திலையை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய ஜடேஜா 12 பந்துகளில் 22ரன்கள் தேவை என்ற நிலையில் நிதானமாக ஆடிவந்தார். இதையடுத்து கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்று நிலையில் ஐந்தாவது பந்தை ஜடேஜா சிக்ஸர் ஆக மாற்றினார் .இதனால் ஆட்டம் சூடு பிடித்தது. கடைசி பந்தை ஜடேஜா பவுண்டரியாக மாற்றுவாரா என்று கேள்வி எழுந்த நிலையில் , அதையும் செய்து காட்டினார்.

இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஏற்கனவே 2010 ,2011,2018, 2021 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply