கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும் – சகோதரர் சத்ய நாராயண ராவ்!!

கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும் – சகோதரர் சத்ய நாராயண ராவ்!!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார். வயதாகிவிட்டது அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை” என்று கூறினார்.

Leave a Reply