ஆர்யாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்கள் கூட்டம் !!

ஆர்யாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்கள் கூட்டம் !!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் ஆர்யா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் விளம்பரப்படுத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, இப்திரைப்படத்தின் டிரைலரை, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மாலில், ஆர்யா மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் வெளியிட்டனர். அப்போது, நடிகர் ஆர்யாவை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம், அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply