உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்க உதவும் உருளைக்கிழங்கு !!

உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்க உதவும் உருளைக்கிழங்கு !!

உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்துக்கொள்வது உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அது உண்மைதான் என்றாலும் உருளைக்கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. உருளைக்கிழங்கை சாறு எடுத்தும் பருகலாம்.

அது காரத்தன்மை வாய்ந்தது என்றாலும் உடலில் அமிலத்தன்மையை குறைக்க உதவும். கருவளையம், கண் வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கு சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

  • உருளைக்கிழங்கு சாறு வயிற்றில் அமிலத்தன்மையை சீராக்கும் திறன் கொண்டது. அசிடிட்டி பிரச்சினை ஏற்படும்போது 50 மி.லி முதல் 100 மி.லி வரை உருளைக்கிழங்கு சாறு பருகலாம்.
  • அல்சர் பாதிப்புக்கு நிவாரணம் தரும் தன்மை உருளைக்கிழங்கு சாறுக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • கருவளையத்தால் பாதிக்கப் படுபவர்கள் உருளைக்கிழங்கு சாறு பருகி வரலாம். கண்களுக்கு அடிப்பகுதியிலும் உருளைக்கிழங்கு சாறை தடவி வரலாம். அல்லது மெல்லிய உருளைக்கிழங்கு துண்டுகளை கண்களின் மேல் அரை மணி நேரம் வைத்திருக்கலாம்.
  • கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவதற்கு உருளைக்கிழங்கு சாறு உதவும்.
  • முகம் மற்றும் கண்கள் வீங்கி இருந்தால் உருளைக்கிழங்கு சாறை உபயோகிக்கலாம். அதில் இருக்கும் நீர்ச்சத்து வீக்கத்தை குறைக்கும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் கொடுக்கும்.
  • உருளைக்கிழங்கில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. அது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.
  • ஒரு டம்ளர் உருளைக்கிழங்கு சாறு பருகுவதன் மூலம் ஒருநாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்தை ஏறக்குறைய பெற்றுவிடலாம். சாப்பிடும் உணவில் வைட்டமின் சி இருப்பது உடலில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • துத்தநாகம், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை உருளைக்கிழங்கில் உள்ள மற்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள். இந்த வைட்டமின்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • தோல் அழற்சி உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு உதவியாக இருக்கும். பொடுகு பிரச்சினை கொண்டவர்கள் உருளைக்கிழங்கு சாறை உச்சந்தலையில் தடவி வருவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

Leave a Reply