திமுகவினருக்கு அரசு பணி கிடைக்க நான் உறுதியாக இருப்பேன்… தமிழக அமைச்சர் பரபரப்பு பேச்சு …

திமுகவினருக்கு அரசு பணி கிடைக்க நான் உறுதியாக இருப்பேன்… தமிழக அமைச்சர் பரபரப்பு பேச்சு …

சேலம் :

சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கேஎன் நேரு,

“10 ஆண்டு காலம் திமுக ஆட்சியில் இல்லாதபோது எதையும் எதிர்பார்க்காமல் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர்.

முக ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று தொண்டர்களின் உழைப்பு என்பது மிகவும் அபாரமானது.

தொண்டர்களின் உழைப்பு காரணமாக தற்போது ஆட்சிக்கு வந்தபோதிலும் ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் தொண்டர்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. செய்ய விருப்பம் இல்லாமல் இல்லை, செய்ய இயலவில்லை என்பதே உண்மை.

 எங்களுக்கு எந்த விதமான சொந்த ஆசையும் இல்லை. தொண்டர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே ஆசை, ஆனால் அந்த ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத சங்கடமான நிலையில் தான் இருக்கிறோம்.

திமுகவினர் யார் யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்களுக்கு நிச்சயம் அரசு பணி கிடைக்க நான் உறுதியாக இருப்பேன்” என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply