தடகள போட்டியில் 16.78 மீட்டர் தூரம் தாண்டி தேசிய ஜூனியர் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற தமிழ கத்தை சேர்ந்த செல்வ பிரபு !!

தடகள போட்டியில் 16.78 மீட்டர் தூரம் தாண்டி தேசிய ஜூனியர் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற தமிழ கத்தை சேர்ந்த செல்வ பிரபு !!

சென்னை:-கிரீஸ் நாட்டில் உள்ள வெனிசிலியா-ஷானியா நகரில் சர்வதேச தடகள போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த செல்வ பிரபு பங்கேற்றார். டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் கலந்து கொண்ட அவர் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

செல்வ பிரபு 16.78 மீட்டர் தூரம் தாண்டி தேசிய ஜூனியர் சாதனையை முறியடித்து தங்கம் வென்றார். மதுரையை சேர்ந்த அவர் இதற்கு முன்பு 16.63 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது அவரது சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்குட்பட்ட உலக தடகள போட்டியில் செல்வ பிரபு 16.15 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்று இருந்தார். தற்போது சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று முத்திரை பதித்தார்.

செல்வ பிரபுவின் தந்தை திருமாறன் கூறும்போது, ‘ எனது மகனின் சாதனையை நினைத்து பெருமைபடுகிறேன். ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறுவான் என்று நம்பிக்கை உள்ளது’ என்றார்.

Leave a Reply