வாத்தியார்களை  மாணவர்கள் அடிப்பாங்க.. அட்ஜஸ்ட் பண்ணித்தான் பாடம் எடுக்கனும்… மீண்டும் சர்ச்சையாக பேசிய தமிழக அமைச்சர் … வைரல் வீடியோ..

வாத்தியார்களை  மாணவர்கள் அடிப்பாங்க.. அட்ஜஸ்ட் பண்ணித்தான் பாடம் எடுக்கனும்… மீண்டும் சர்ச்சையாக பேசிய தமிழக அமைச்சர் … வைரல்  வீடியோ..

சென்னை;

தினமும் தூங்கி எழுந்திருக்கும் போது, நமது கட்சியினர் இன்னைக்கு எந்த பிரச்சனையை பண்ணியிருக்காங்களோ..? என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அந்த அளவுக்கு அமைச்சர்களின் பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் முதல்வர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது

அதில் முக்கியமானவர் அமைச்சர் பொன்முடி. அவர் எங்கு பேசினாலும் ஏதாவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் .

அந்த வகையில் ‘பஸ்ல ஓசியில் பயணம்’, கிராம சபைக் கூட்டத்தில் பெண்ணை ஒருமையில் பேசியது, கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறச் சென்ற போது, ‘எனக்கா ஓட்டுப் போட்ட’ என அடுத்தடுத்து கூறி சர்ச்சையை கிளப்பியவர் அமைச்சர் பொன்முடி.

இந்த நிலையில், மாணவர்கள் அடித்தால் அதனை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு பாடம் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அமைச்சர் பொன்முடி அட்வைஸ் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் பகிர்ந்து, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Leave a Reply