பஞ்சம் இல்லாமல் சீதாப்பழத்தில் கொட்டி கிடக்கும் சத்துக்கள்…!

பஞ்சம் இல்லாமல் சீதாப்பழத்தில் கொட்டி கிடக்கும் சத்துக்கள்…!

சீதாப்பழத்தின் வெளித்தோற்றம் பார்க்க வித்தியாசமாக கரடு முரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி மிகவும் இனிப்பாக இருக்கும். இருந்தாலும் சீதாப்பழத்தின் மருத்துவ பலன்கள் ஏராளம்.

சீதாப்பழத்தை ஆங்கிலத்தில் Custard Apple என்பார்கள். இதை உண்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால் இதில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதிலுள்ள இனிப்பு சுவையுடன், மற்ற பழங்கள் போட்டி போட முடியாது. அந்தளவிற்கு தித்திப்பாக இருக்கும்.

வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்களுக்கு பஞ்சம் இல்லாமல் சீதாப்பழத்தில் கொட்டி கிடப்பதால் ஊட்டச்சத்துக்களின் ஒரு பெரும் புதையலாகக் கருதப்படுகிறது.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம் ஆகியவை சீதாப்பழத்தில் மிகுந்து காணப்படுகின்றன. இந்த பழம் நம்முடைய எலும்புகளை வலுவாக்கும். வீக்கம், மாதவிடாய் முன் நோய்க்குறி போன்ற நோய்களை குணமடைய செய்ய உதவுகிறது.

சீதாப்பழம் இரத்தம் விருத்தி அடையசெய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்தும். நம்முடைய நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு.

சீதா பழத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீரழிவு நோய் வந்தவர்கள் பழங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனென்றால் பருவகால பழங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சட்டென ஏற்றிவிடும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் பி6 சீதாப்பழத்தில் உள்ளது.

சீதாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் சீதாப்பழத்தை சாப்பிட வேண்டும். ஏனெனில் இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.

சீதாப்பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் “ரிபோஃப்ளேவின்” மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.

சீதாப்பழத்தில் உள்ள மெக்னீசியம் நமக்கு உடல்நல பயனை அளிக்கிறது. இதனால் நமக்கு மாரடைப்பு ஏற்படாமல் நம்மை அது பாதுகாக்கும்.

சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும். சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் சி உள்ளதால் நமக்கு சளி பிடிக்காது.

சீதாப்பழத்தில் வைட்டமின் பி வளமாக உள்ளது. இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை நம்மை அண்டாமல் பாதுகாக்கும்.

சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் நம் உடம்பில் சேராமல் காக்கும். சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

எடை குறைக்க நினைப்பவர்கள் சீதாப் பழம் உண்ணலாம். சீதா பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இதன் காரணமாக நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். பசி எடுக்காது. இதனால் அதிகம் சாப்பிடாமல் இருக்கலாம். நம்முடைய உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும்.

சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மையாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும். சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து தொடர்ந்து பருகி வர, நம்முடைய நரம்புகள் வலுப்படும்.

இப்படி பல மருத்துவ குணங்களை கொண்ட சீதா பழத்தை தினமும் எடுத்து கொள்வதால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெற முடியும். ஆதலால் தயங்காமல் அடிக்கடி சீதாப் பழத்தை சாப்பிடுங்கள்.

Leave a Reply