திருப்பதி கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 9 நாட்கள் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது!!

திருப்பதி கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 9 நாட்கள் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது!!

திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 9 நாட்கள் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.

அதையொட்டி நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை மிதுன லக்னத்தில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் துணை அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply