நடிகர் சூரி தனது ரசிகர் ஒருவரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று அவர் தாயாரின் உடல்நலம் விசாரிப்பு!!

நடிகர் சூரி தனது ரசிகர் ஒருவரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று அவர் தாயாரின் உடல்நலம் விசாரிப்பு!!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூரி ‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதில், மலையாள நடிகை அன்னா பென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் சூரி தனது ரசிகர் ஒருவரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று அவர் தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். பின்னர் அந்த பெண்மணியிடம் பேசிய சூரி, “என் அன்பு தம்பிகள். என்னை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

என் பெயரை சொல்லி பல உதவிகள் செய்கிறார்கள். என்னால் எதுவும் இல்லை. என் ரசிகரின் அம்மாவை என் அம்மாவாக பார்க்க வந்திருக்கிறேன் இதுவே எனக்கு பெருமை” என்று பேசினார்.

Leave a Reply