பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது வரிசை யில் கரோலின் கார்சியா அதிர்ச்சி தோல்வி!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது வரிசை யில் கரோலின் கார்சியா அதிர்ச்சி தோல்வி!!

பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அனா பிளின்கோவா (ரஷியா) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார்.

அனா பிளின்கோவா

ஷபலென்கா (பெலாரஸ்), எமர்டன்ஸ் (பெல்ஜியம்) உள்ளிட்ட வீராங்கனைகள் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), முதல் நிலை வீரரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

Leave a Reply