கோடை வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவு ”தர்பூசணி” !!

கோடை வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவு ”தர்பூசணி” !!

வெயில் மண்டையை பிளந்து வருகிறது. அனல் காற்று பாடாய் படுத்துகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி மே, ஜூன், ஜூலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், கோடை வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

1.தர்பூசணி : இது கோடை காலத்தில் உடலை ‘ஹைட்ரேட்’ (நீரேற்றம்) செய்யும் ஒரு சூப்பர் ஹைட்ரேஷன் உணவாகும். தர்பூசணிகள் அதிகப்படியான நீரை கொண்டுள்ளன. மேலும் அவை உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. மேலும் தர்பூசணி சூரிய வெப்பத்தால் தோல் சேதமடையாமல் பாதுக்காக்கிறது.

2.தக்காளி : கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க பலர் எப்போதும் சன்ஸ்கிரீன் போன்ற செயற்கை பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கை வழியில் அதற்கு நீங்கள் பாதுகாப்பை தேட முடியும்.

ஆம் தக்காளி மற்றும் பிற சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் தோலுக்கு கூடுதல் பாதுகாப்பை நீங்கள் பெற முடியும். ஏனெனில் இது லைகோபினை கொண்டுள்ளது. தக்காளியை சிவப்பு நிறமாக்கும் கரோட்டினாய்டு மற்றும் அதிக லைக்கோபீனை உட்கொள்வதன் மூலம் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க முடியும்.

  1. முலாம் பழம் : கோடை கால ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர் மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக உள்ளது. எனவே ஆரோக்கியமான சுவையான கோடை கால உணவாக முலாம் பழம் விளங்குகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் நீரிழப்பை குறைக்கிறது.

4.பெர்ரி : ஸ்ட்ராபெர்ரி, ப்ளு பெர்ரி, ப்ளாக் பெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரி இரண்டு அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. ப்ளாக் பெர்ரி மற்றும் ராஸ் பெர்ரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

  1. சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பருவகால பழங்கள் அல்ல என்றாலும் ஆரஞ்சு போன்ற கனிகளில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது கோடையில் உங்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நமக்கு வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது நமது உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால் நமது தசைப்பிடிப்புகளில் ஆபத்து ஏற்படலாம். எனவே உடலை நீரேற்றமாக்கவும், புத்துணர்ச்சி ஆக்கவும் இது உதவுகிறது. அதே போல குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். அல்லது சோடா குடிப்பதற்கு பதிலாக எலுமிச்சை சாற்றை அருந்தலாம். கோடை காலங்களில் மீன் போன்ற இறைச்சி வறுவல்களில் எலுமிச்சையை பிழிந்து விட்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கூடுதல் வைட்டமின்-சி கிடைக்கிறது.
  2. இனிப்பு சோளம் : கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். நீங்கள் அதை வேகவைத்தாலும் க்ரில் செய்தாலும் அது இனிப்பு சுவையிலேயே இருக்கும். மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. மேலும் இது உங்கள் கண்களை வெயில் பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.
  3. அவகாடோ : உங்கள் ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய ஒரு உணவாக அவகாடோ உள்ளது. ஏனெனில் அவகாடோ மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் பைபர் ஆகியவற்றை கொண்ட சுவையான மூலமாக உள்ளது. கூடுதலாக அவை இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளன.

Leave a Reply