சென்னையில் முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!!

சென்னையில் முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை பறித்து, துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும் அவசர சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் திமுக முழு அளவில் ஈடுபடும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “தேர்வு செய்யப்பட்ட அதிகாரத்தை பறிக்கக் கூடாது என உச்சநீதிமன்றமே தெரிவித்திருக்கிறது.
டெல்லி துணை நிலை ஆளுநர் மூலம் டெல்லி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவை மாநிலங்களையில் எதிர்க்கட்சிகள் எதிர்க்கவேண்டும்.ஜனநாயகத்தை பாதுகாக்கவே திமுகவை நாடி வந்தோம்

மாநிலங்களவையில் பாஜகவுக்கு பலமில்லை. ஒன்றிணைந்தால் மசோதாவை வீழ்த்தலாம். கூட்டாட்சிக்கு விரோதமான ஆட்சியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜகவை வீழ்த்த இது ஒரு வாய்ப்பாக இருக்கும். சட்டத்தை எதிர்த்து வென்றால் தேர்தலுக்கு முன் அரையிறுதியில் வென்றதுபோல் இருக்கும்” என்றார்.