பிறந்தநாளையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு வி.கே.சசிகலா வாழ்த்து!!

பிறந்தநாளையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு வி.கே.சசிகலா வாழ்த்து!!

இசைஞானி இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி இளையராஜாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சசிகலா இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலக தமிழர்களுக்கு கிடைத்த இசை பொக்கிஷமாக விளங்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் 80வது பிறந்தநாளில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம்,கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து இமாலய சாதனை படைத்த இசைஞானி இளையராஜா அவர்கள், மேல் தட்டு மக்கள் மட்டுமே ரசித்து வந்த கர்நாடக இசையை பாமரர்களுக்கும் எளிமையாக கொண்டு சேர்த்ததை எண்ணிப் பெருமிதம் அடைகிறோம்.

அன்பு சகோதரர் இளையராஜா அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழவும், நூற்றாண்டுகளை கடந்தும் ஈடில்லா இசைப் பயணத்தையும், ஆன்மீகப் பயணத்தையும் தொடர்ந்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply