டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு – முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன்….

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு – முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன்….

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் ஜூன் 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது. அது இங்கிலாந்தில் இருக்கும் வழக்கமான பவுன்ஸ் மைதானங்களை விட சற்று அதிக சவாலாகவே இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்காது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிகமாக கை கொடுக்காது.

எனவே பொதுவான அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா எப்படி விளையாடப் போகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறேன். ஒருவேளை இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.

மேலும் 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம். அது திறமையைப் பற்றிய கேள்வி கிடையாது. மாறாக எந்த மனதுடன் அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தது. இப்போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல் செயலில் சிறப்பாக செயல்படுங்கள் என்பதே இந்திய அணிக்கு என்னுடைய ஆலோசனையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply