ரசிகர்களை பார்த்து கையசைத்த ரஜினி!!

ரசிகர்களை பார்த்து கையசைத்த ரஜினி!!

புதுச்சேரி ரோடியர் மில்லில் நடிகர் ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பின் 2-ம் நாளான நேற்று ரஜினியை பார்க்க குவிந்த ரசிகர்கள் போலீசாருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. 2-ம் நாளாக நேற்று ரோடியர் மில் பழைய வளாகத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினி கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் ரோடியர்மில் வாயிலில் திரண்டனர். ரஜினியை பார்க்க அனுமதிக்குமாறு அங்கிருந்த போலீசாரிடம் கேட்டனர்.

ஆனால் போலீசார் ரசிகர்களை அனுமதிக்க மறுத்தனர். ஏராளமான ரசிகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு முடித்து காரில் வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை பார்த்து கையை அசைத்தபடி வேகமாக புறப்பட்டு சென்றார். ரஜினியை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். 3-வது நாளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Leave a Reply