ஆரோக்கியம் நன்மைகள் நிறைந்த பிரக்கோலி!!!

ஆரோக்கியம் நன்மைகள் நிறைந்த பிரக்கோலி!!!

பிரக்கோலி நம்மில் பலரும் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. இது பார்ப்பதற்கு காலிபிளவர் மாதிரியே இருக்கும். ஆனால் இதன் நிறம் பச்சை. இது பலவிதமான நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் மருத்துவ நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சத்துகள்
வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஏ, நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் கரோடின் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளது.

ஞாபக சக்தி
பிரக்கோலி ஞாபக மறதி என்னும் நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே வைட்டமின் டி குறைப்பாட்டை சரி செய்யும்.

வீக்கம்
பிரக்கோலி இலைகள் உடலில் வீக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் கே ஆர்த்ரைட்டிஸ் வீக்கத்தையும் குறைக்கும்.

கர்ப்பிணி பெண்கள்
பிரக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் பிரசவகாலத்தில் தங்களுக்கு தேவையான கால்சியத்தை தரும். மேலும் பிறக்கும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

புற்றுநோய்
பிரக்கோலி புற்று நோயைத் தடுக்கும் தன்மை கொண்டது. பிரக்கோலியில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் மற்றும் என்சைம்கள் புற்று நோய்கள் உருவாகாமல் தடுக்கிறது.

கல்லீரல்
இது ஒரு தனித்தன்மை வாய்ந்த காயாகும். இதில் அடங்கியுள்ள சத்துகள் கல்லீரல் செயல் திறனை அதிகரித்து நோய்கள் உருவாகாமல் தடுக்கிறது.

கொழுப்பு
கொழுப்பு சம்மந்தப்பட்ட பிரச்னை உடையவர்கள் பிரக்கோலி அதிகமாக சாப்பிடலாம். ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது. அதனால் உடல் எடையும் குறையும்.

எலும்பு நோய்கள்
பிரக்கோலியில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும்.

இதயம்
பிரக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

செரிமானம்
இதில் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள் நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.

சர்க்கரை நோய்
பிரக்கோலி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். ஆகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை அதிகம் சாப்பிடலாம்.

கண்
பிரக்கோலியில் இருக்கும் லூடின் (Lutein), சியாங்தின் போன்ற வேதிப்பொருள்கள் கண் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. பிரக்கோலியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 2 ஆகியவை காண்பார்வையை அதிகரிக்கும்.

சருமம்
பிரக்கோலி அதிகமாக சாப்பிடுவதால் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும் தோல் புற்று நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

எப்படி பிராக்கோலி தேர்வு செய்வது?
பிரக்கோலியின் நிறம் முழுவதும் ஒரே மாதிரி சமமாக இருக்க வேண்டும். அது பழுப்படைந்து இருக்கக் கூடாது. இதன் நடுவில் மஞ்சள் அல்லது பழுத்த பூ போன்ற தோற்றம் இருக்கக்கூடாது. அதன் தண்டு எந்தப் புள்ளிகளும் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும். இது தான் பிரஷ் பிரக்கோலி

சாப்பிடும் முறை:
பிரக்கோலி ருசியான சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது. இதை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். மேலும் சூப், சாலட் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம். இதை பொரிப்பதை விட ஆவியில் வேகவைத்து சாப்பிட்டால் அனைத்து சத்துக்களையும் இழக்காமல் பாதுகாக்கலாம்.

Leave a Reply