நரம்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும் அன்னாசிப்பூ!!

அன்னாசிப்பூ பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அன்னாசிப்பூ என்றால் அன்னாசிப் பழத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பூ என நீங்கள் நினைக்க வேண்டாம். அது வேறு இது வேறு. தென்மேற்கு சீனாவை பூர்வீகமாகக் கொண்ட இல்லீசியம் வெரம் என்ற செடியில் இருந்து கிடைக்கக்கூடிய காயே அன்னாசிப் பூ என அழைக்கப்படுகிறது.
இது நட்சத்திர சோம்பு, ஸ்டாரானைஸ், சீன நட்சத்திர சோம்பு, பேடியன் இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது அதிக சுவை கொண்ட ஒரு மசாலாவாக உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நட்சத்திர சோம்புவில் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் வாசனை திரவியங்கள், சோப்புகள், பற்பசைகள், தோல் கிரீம்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் இது அதிக அளவு பிரியாணி மற்றும் இறைச்சியில் மசாலாவாக சேர்க்கப்படுகிறது. சீன உணவு வகைகளிலும், மலாய் மற்றும் இந்தோனேசிய உணவு வகைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நட்சத்திர சோம்பு காய் பழுக்கும் முன் பறிக்கப்பட்டு பின்னர் வெயிலில் உலர்த்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
நட்சத்திர சோம்பு தெற்கு சீனாவில் தோன்றியது. 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்தாகவும் மசாலாவாகவும் பயன்படுத்தப்படுகிறது. 1500 களின் பிற்பகுதியில் நட்சத்திர சோம்பு ஒரு ஆங்கில மாலுமி மூலம் ஐரோப்பாவிற்கு வந்தது. விரைவில் சீனாவிலிருந்து ரஷ்யா வழியாக தேயிலை போல வர்த்தகம் செய்யப்பட்டது. அதன் இனிமையான சுவை காரணமாக நட்சத்திர சோம்பு முக்கியமாக பல உணவுகளில் பயன்படுத்தப்பட்டது.
இதில் காணப்படும் லினாலூல், குவெர்செடின், அனெத்தோல், ஷிகிமிக் அமிலம், காலிக் அமிலம், லிமோனென் ஆகிய கலவைகள் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்பு கொண்டது. இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நட்சத்திர சோம்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காரணமாக பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் உள்ள ஷிகிமிக் அமிலம் வலுவான ஆன்டிவைரல் பண்புகளை கொண்ட ஒரு கலவை. நட்சத்திர சோம்புவில் அனெத்தோலின் ஃபிளாவனாய்டு அதிகம் உள்ளது. இந்த கலவை இதன் தனித்துவமான சுவைக்கு காரணமாகும். மேலும் இது சக்திவாய்ந்த பூஞ்சை காளான் பண்புகளை கொண்டுள்ளது. நட்சத்திர சோம்புவின் மற்றொரு முக்கியமான மருத்துவப் பயன் என்னவென்றால் பல்வேறு பொதுவான நோய்களில் உள்ள பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் திறன் ஆகும்.
பாரம்பரிய சீன மற்றும் நாட்டுப்புற மருத்துவ நடைமுறைகளில் சுவாச நோய்த்தொற்றுகள், குமட்டல், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் தேநீர் தயாரிப்பதற்காக நட்சத்திர சோம்பு பயன்படுத்தப்படுகிறது.
நட்சத்திர சோம்பு இரும்பு, மெக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ், வைட்டமின்கள் B1, B2, B3, B6, E, செலினியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மூளை சக்தியை அதிகரிக்கிறது நட்சத்திர சோம்பு. வயதாகும் பொழுது நமது மூளையின் செயல்பாடு குறைகிறது.
நட்சத்திர சோம்பில் இயற்கையான மூளையை ஆரோக்கியப்படுத்தும் பூஸ்டர் உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது மூளையின் மிகவும் சுறுசுறுப்பான பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை வேகமாக எடுத்துச்செல்கிறது. சீன மருத்துவத்தில் நட்சத்திர சோம்பு ஒரு மூளை டானிக்காக கருதப்படுகிறது. இது செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் இது மன தெளிவை அதிகரிக்கவும், நல்ல தூக்கத்தை கொடுக்கவும், நரம்பு மண்டலத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. சில ஆய்வுகள் நட்சத்திர சோம்பு மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றன. இதில் உள்ள அதிக வைட்டமின் பி உள்ளடக்கம் மனநிலையை மேம்படுத்துகிறது. .மன அழுத்தத்தை குறைக்கிறது. வைட்டமின் பி உட்கொள்வது பதட்டம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கும்.
நட்சத்திர சோம்பு தேநீர் குடிப்பது வைட்டமின் பி அதிகரிக்க உதவும். செரிமானத்திற்கு நல்லது நட்சத்திர சோம்பு. நட்சத்திர சோம்பில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. நட்சத்திர சோம்பு குடல் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
நட்சத்திர சோம்பு செரிமான அமைப்பைத் தளர்த்தும். இது உங்கள் வயிறு அல்லது குடலில் வாயு உருவாவதால் ஏற்படும் வீக்கம் மற்றும் அசௌகரியத்தைத் தடுப்பதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஜலதோஷம், காய்ச்சல், தொண்டை வலி போன்றவற்றுக்கு நட்சத்திர சோம்பு டீ நல்ல மருந்தாகும்.
இது தொண்டையில் உள்ள பாக்டீரியாக்களைக் கொல்லும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம் உள்ளது. இதனால் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு நோயை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது. உங்கள் உடலில் இருந்து இயற்கையாகவே தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றும் திறனை அதிகரிக்கிறது.
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் நட்சத்திர சோம்பு தேநீர் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் உங்களுக்கு தேவையான இன்சுலின் அளவை குறைக்கவும் உதவும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ம் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும். இது ஃபிளாவனாய்டுகள் எனப்படும் சேர்மங்களையும் கொண்டுள்ளது.
இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. தலைவலியைப் போக்க நட்சத்திர சோம்பு இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகை பாரம்பரியமாக ஒற்றைத் தலைவலி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது பதட்டமான தசைகளை தளர்த்தும் திறன் கொண்டுள்ளது.
….