வாகனங்களை அப்புறப்படுத்தாமல் ரோடு போட்டு சென்ற ஒப்பந்ததாரர்… அஜாக்கிரதையின் உச்சம்….

வாகனங்களை அப்புறப்படுத்தாமல் ரோடு போட்டு சென்ற ஒப்பந்ததாரர்… அஜாக்கிரதையின் உச்சம்….

புதுக்கோட்டை; 

புதுக்கோட்டை நகர பகுதிகளில் தற்பொழுது சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட கீழ ராஜவீதி அருகே சாந்தநாதசுவாமி தெருவில் உள்ள சாந்தாரம்மன் கோயில் முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தார் சாலை அமைக்கும் போது கோயில் அருகே ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் சாலை அமைப்பவர்கள் வாகனங்கள் நின்ற இடத்தை விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் சாலை அமைத்துவிட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கும் பொழுது முறையாக அமைக்கபடுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வரக்கூடிய நிலையில், புதிய சாலை போடும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை கூட அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு சாலை அமைக்காமல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு புதிய சாலை அமைத்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Reply