ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபாஸ்!!

ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபாஸ்!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் பங்கேற்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply