ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் அதிரடி பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு உத்தரவு..

ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் அதிரடி பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு உத்தரவு..

சென்னை;

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, போக்குவரத்து துறை செயலராக உள்ள பணீந்திர ரெட்டிக்கு , தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து துறை ஆணையராக சண்முகசுந்தரம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேபோல்  சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு துறை ஆணையராக ஜெயகாந்தன் ஐஏஎஸ்-ம்,  மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையராக ரத்னா ஐஏஎஸ்-ம் நியமிக்கப்பட்டிருகின்றனர். 

புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குனராக  எல்.நிர்மல்ராஜ்  நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் – சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநராகவும்,  பாலசந்தர் – சேலம் மாநகராட்சி ஆணையாராகவும், மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே.பிரவீன்குமாரும்  நியமிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply