மாணவ மாணவிகளை சந்திக்கும் நடிகர் விஜய்..!! -விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு…

மாணவ மாணவிகளை சந்திக்கும் நடிகர் விஜய்..!! -விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு…

தமிழக முழுவதும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நேரில் பரிசுகளை விஜய் வழங்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த சந்திப்பு ஜூன் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கு இணங்க வருகின்ற ஜூன் 17ஆம் தேதி சனிக்கிழமை அன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு தளபதி விஜய் அவர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply