இவரை அறநிலைய துறையின் அமைச்சராக ஆக்குங்கள்… கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார்… ஹெச்.ராஜா விருப்பம் …

இவரை அறநிலைய துறையின் அமைச்சராக ஆக்குங்கள்… கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார்…  ஹெச்.ராஜா விருப்பம் …

மதுரை ;

மதுரை எஸ்.எஸ்.காலனியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் ;

தமிழக டாஸ்மாக்கிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடை பெறுகிறது .

அனிதா உயிரிழந்த போது நீட் தேர்வுக்கு தடை விதிக்க சொன்ன ஸ்டாலின், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வலியுறுத்தி ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட பின்னர் மொத்த டாஸ்மாக்கையும் மனிதாபிமான அடிப்படையில் மூடியிருக்க வேண்டாமா? என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி பேசினார்.

 மேலும் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரை பதவி விலக சொல்பவர்கள் ஏன் கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

மேலும் அவர் அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு தொடர கூடாது. அவருக்கு பதிலாக கே.என்.நேருவை அறநிலைய துறை அமைச்சராக நியமிக்கலாம்.

அவர் நல்ல வைஷ்ணவர். அவர் கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார் எனக் கூறினார்.

Leave a Reply