தங்கமே..!- தங்கமே..!- லவ் யூ தங்கமே..!- நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்!!

தங்கமே..!- தங்கமே..!- லவ் யூ தங்கமே..!- நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்!!

தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர்.

விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி அன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதற்கு மத்தியில் நாட்கள் ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம்.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து ஓராண்டு ஆகிறது. ஜூன் 9ம் தேதி (இன்று) தங்களது முதலாமாண்டு திருமண நாளை விக்னேஷ் சிவன்- நயன்தாரா கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

நேத்து தான் திருமணம் முடிந்ததுபோல் உள்ளது. திடீரென எனது நண்பர்கள் முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி வருகின்றனர்.

லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

இன்னும் பயணிக்க வெகுதூரம் உள்ளது..!

ஒன்றாகச் சாதிக்க நிறைய இருக்கிறது..!

நம் வாழ்வில் உள்ள நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், கடவுளின் அனுகிரகத்துடனும் மிகப்பெரிய ஆசீர்வாதம், நம் திருமணத்தின் இரண்டாம் ஆண்டில் கொண்டு வரும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply