தளபதி 68 படத்தில் ”ஜோதிகா” நடிக்க சம்மதிப்பாரா?

தளபதி 68 படத்தில்  ”ஜோதிகா” நடிக்க சம்மதிப்பாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது மிகவும் பிஸியாக நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது லியோ படத்தின் பாடல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிக்காக மிகவும் பிரம்மாண்டமான செட்டில் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. லியோ படத்தின் துவக்கத்தில் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்ததோ அதை விட ஒரு படி மேலாகவே வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்திற்கு இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

அதற்கு காரணம் மிகவும் ஜாலியான திரைக்கதை கொண்ட படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. சமீப காலமாக நடிகர் விஜய் சீரியஸ் சப்ஜெக்ட் படங்களிலேயே நடித்து வருவதால் அவரை ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

‘லியோ’ படம் குறித்த அப்டேட்கள் சோசியல் மீடியாவில் அடங்கி தற்போது ‘தளபதி 68’ படத்தின் அப்டேட் மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளில் இருந்து தளபதி 68 அப்டேட் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அந்த வகையில் தளபதி 68 படத்திற்கான டிஸ்கஷன் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் லொகேஷன் குறித்த விவரம் வெளியாகும் என கூறப்படும் நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முதலில் பிரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக இருக்கலாம் என பேசப்பட்டது ஆனால் தற்போது ஜோதிகா நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. குஷி, திருமலை படத்தில் இவர்களின் காம்போ சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அப்படி இப்படத்தில் நடிக்க ஜோதிகா சம்மதம் தெரிவித்தால் விஜய் – ஜோதிகா காம்போ 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைவார்கள் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் ரசிகர்கள். யுவன் ஷங்கர் ராஜா தளபதி 68 படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேசமயம் மெர்சல் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகாவை தான் முதலில் அணுகினார்கள். ஆனால் அவர் நிராகரித்ததால் தான் அந்த வாய்ப்பு நித்யா மேனனுக்கு கிடைத்தது. அதனால் தளபதி 68 படத்தில் நடிக்க ஜோதிகா சம்மதிப்பாரா? அல்லது நிராகரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply