அமைச்சர் செந்தில் பாலாஜியால் திமுகவின் வீழ்ச்சி ஆரம்பம்… அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…

அமைச்சர் செந்தில் பாலாஜியால் திமுகவின் வீழ்ச்சி ஆரம்பம்… அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…

திருவிடைமருதூர்;

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தேரோடும் வீதியில் தேர் போன்று அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம‌.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் ;

 பாமக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என கேட்டதற்கு திமுக அளித்தது எங்கும் மது எதிலும் மது மட்டுமே . திமுகவின் வீழ்ச்சி மதுவிலக்கு துறை அமைச்சர் முருகன் பெயர் பாதியும் பெருமாள் பெயர் பாதியும் கொண்ட செந்தில் பாலாஜியால் ஏற்படும் என்றார்.

 முதலமைச்சரிடம் பலமுறை தற்போதுள்ள மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு சமூக அக்கறை உடைய ஒரு நபரை நியமிக்க வேண்டும் என பலமுறை எடுத்துக் கூறி விட்டோம் எனவும் திமுக ஆட்சியில் மதுவை திணித்து திணித்து தற்போது உள்ள தலைமுறைகளை போதைப் பழக்கத்திற்கு முழுமையாக அடிமையாக்கி விட்டதுதான் திராவிட மாடல் என குற்றம்சாட்டினார்.

தற்போது உள்ள தலைமுறையை காப்பாற்ற முடியாது அடுத்த தலைமுறையாவது காப்பாற்ற பாமகவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் பேசினார்.

Leave a Reply