திமுக பெண் பிரமுகரை ஆபாசமாக பேசி அடித்து கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்….கோவையில் பரபரப்பு…

திமுக பெண் பிரமுகரை ஆபாசமாக பேசி அடித்து கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்….கோவையில் பரபரப்பு…

கோவை:

கோவை திமுக 20 வது வார்டு வட்ட துணைச் செயலாளராக இருப்பவர் அன்னபூரணி. இவர் தங்கள் பகுதியில் புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்ய திமுக கவுன்சிலர் மரியராஜ் என்பவரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது..

ஆனால், வேலை எதுவும் நடக்கவில்லை. இதனால், மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் அந்த பகுதியை அன்னபூரணியே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மரியராஜ், தன்னுடைய ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து அன்னபூரணியை பொதுவெளியில் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய பகுதி என்பதால், நைட்டியுடனேயே அன்னபூரணி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

 அப்போது, அவருடைய ஆடைகளையும் கிழித்து மரியராஜ் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், திமுக மாமன்ற உறுப்பினர் மரியராஜ் மீது சரவணம்பட்டி போலீசிலும் புகார் தந்துள்ளார்.

 அடியாட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுவதாகவும், மரியராஜ் தாக்கியதில் தன்னுடைய ஆடை கிழிந்ததாகவும், மரியராஜின் குடும்ப உறுப்பினர்களும் ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் அன்னபூரணி பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, வயதான அப்பா, கணவருடன் தனியாக வசிப்பதால் இவர்களால் அச்சம் ஏற்பட்டு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அன்னபூரணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

திமுக பிரமுகரை திமுக கவுன்சிலரே தாக்கிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Leave a Reply