ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி பேசக்கூடாது என்பதற்கு உதாரணம் தான் திருமாவளவன்… பாமக பாலு கடும் விமர்சனம்….

ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி பேசக்கூடாது என்பதற்கு உதாரணம் தான் திருமாவளவன்… பாமக பாலு கடும் விமர்சனம்….

சென்னை;

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு வன்முறை ஏற்படும் சூழல் நிலவியது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை கோயிலை பூட்டுமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார்.

அப்போழுது பாமக குறித்தும் அந்த கட்சியின் வழக்கறிஞர் பாலு மீதும்  கடுமையான விமர்சனங்களை திருமாவளவன் முன்வைத்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு,

ஒரு அரசியல் கட்சித் தலைவர் எப்படி பேசக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக திருமாவளவன் இருப்பதாக விமர்சித்தார். திருமாவளவனை அடையாளப்படுத்தியதே பாமக தான் எனவும் பாலு குறிப்பிட்டார்.

தேர்தலை மனதில் வைத்தே மேல்பாதி விவகாரத்தை திருமாவளவன் பேசி வருவதாகவும் கூறினார். மோடி சமூகத்தைப் பற்றி பேசியதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை திருமாவளவன் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் பாலு தெரிவித்தார்.

Leave a Reply