ஊரைவிட்டு ஒட்டு மொத்தமாக வெளியேறிய கிராம மக்கள்… வினோத காரணம்….

ஊரைவிட்டு ஒட்டு மொத்தமாக வெளியேறிய கிராம மக்கள்… வினோத காரணம்….

கிருஷ்ணகிரி;

கிருஷ்ணகிரி ஒன்றியம் கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒப்பலகட்டு கிராமத்தில் கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு தொடர் துர் மரணங்களால் நிலைகுலைந்து போன கிராம மக்கள் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஒப்பலகட்டு கிராம மக்களை காப்பாற்ற ஊரை காலி செய்து ஊர் எல்லைத் தாண்டி குடியேறி கிராமத்தில் புகுந்துள்ள காத்து கருப்புகளை விரட்ட முடிவு செய்தனர்.

அதன்படி அதிகாலையில் ஊர் எல்லைப்பகுதியில் கிராமத்திற்குள் யாரும் புகுந்து விடாமல் இருக்க தகுந்த பதுகாப்பு போடப்பட்டு ஒப்பலகட்டு கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் மற்றும் கிராம தெய்வங்களை தூக்கி கொண்டு ஊர் எல்லையை தாண்டி தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் குடிபுகுந்தனர்.

பின்னர் கிராம மக்கள் பகல் முழுவதும் அங்கு தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு அங்கயே வன தேவதையை வழிபட்டனர்.

பின்னர் மாலை சூரியன் மறைந்த பிறகு மண்டு மாரியம்மன், முத்துமாரியம்மன், செல்லி மாரியம்மன் ஆகிய கிராம தெய்வங்கள் முன்னேறி செல்ல, பின்னாடி கிராம மக்கள் தங்கள் கால்நடைகளுடன் மீண்டும் தங்களது கிராமத்தை நோக்கி சென்றனர்.

பின்னர் ஊர் எல்லைகளில் ஆடுகள் பலியிட்டு பூஜைகள் செய்தபின் அனைவரும் தங்களது வீடுகள் முன்பாக கற்பூரத்தினை ஏற்றிவைத்து வீடுகளுக்கு சென்றனர்.

இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில்,

‘’கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு ஊரில் பல்வேறு மரண சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளது. கிராமத்தில் காத்து கருப்பு போன்ற தீயசத்திகள் புகுந்துள்ளதால்தான் இந்த மரணங்கள் நடத்துள்ளதாக தெரிகிறது.

இந்த காத்து கருப்பை கிராமத்தைவிட்டு விரட்டவே ஊரில் எந்த ஜீவராசிகளும் இல்லாமல் ஊரை காலி செய்து, ஊர் எல்லையை தாண்டி குடிபெயர்ந்தால் இந்த காத்து- கருப்பு கிராமத்தை விட்டு சென்றுவிடும் என்பதால் நாங்கள் அனைவரும் கிராமத்தை காலி செய்தோம்’’ என அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply