கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

கோவை புலியகுளத்தில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழாவுக்கு கோவை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று காலை 8 மணிக்கு திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் கலந்து கொண்டு திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து பலூன் பறக்கவிடப்பட்டதுடன், சமாதானத்துக்கு அடையாளமாக புறாக்களும் பறக்கவிடப்பட்டன. அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமான பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் எழுப்பினார்கள். வருகிற 18-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. அன்று இரவு ஆடம்பர தேர்பவனி நிகழ்ச்சியும் நடக்கிறது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு அரவக்குறிச்சியை சேர்ந்த பிரான்சிஸ் ஜெரால்டு தலைமையில் நற்கருணை வழங்குதல் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர் தலைமையிலும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வருகிற 18-ந் தேதி ஆடம்பர தேர்பவனியை முன்னிட்டு அன்று காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. இதில் கோவை மறைமாவட்ட ஆயர் எல்.தாமஸ் அக்குவினாஸ் பங்கேற்கிறார். பின்னர் வேண்டுதல் தேர்பவனி நிகழ்ச்சியும், திருப்பலியும் நடக்கிறது.

தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியாக செல்கிறது. இதில் ஆலய பங்குகுரு ராயப்பன், உதவி பங்குகுரு ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply