கத்துக்குட்டி அண்ணாமலையை அமித்ஷாவும், ஜெ.பி.நட்டாவும்  கண்டிக்க வேண்டும்… ஜெயக்குமார் ஆவேசம்…

கத்துக்குட்டி அண்ணாமலையை அமித்ஷாவும், ஜெ.பி.நட்டாவும்  கண்டிக்க வேண்டும்… ஜெயக்குமார் ஆவேசம்…

சென்னை;

அதிமுக தொடர்பான  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் தொடர்ந்தால் அதிமுக-பாஜக கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது;

 தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என அண்ணாமலை கூறியிருந்தார். 

இந்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

 அண்ணாமலை பேசுவது கூட்டணி தர்மத்தை மீறிய செயல். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, விமர்சனம் செய்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஜெ.பி.நட்டாவும், அமித்ஷாவும் அண்ணாமலையை கண்டிக்க வேண்டும்.

கத்துக்குட்டி அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது. திமுக அரசினை விமர்சிக்காமல், கூட்டணி தர்மம் கூட இல்லாமல் அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்கிறார்.

 பாஜக மாநில தலைவர்களாக இருந்தவர்கள் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக இருந்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுய விளம்பரத்திற்காக பேசி வருகிறார். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைப்பது போல் அண்ணாமலையின் செயல் உள்ளது.

அண்ணாமலையின் விமர்சனம் தொடர்ந்தால் கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும். மாநில பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. இவ்வாறு கூறினார். 

Leave a Reply