சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடிய அதிதி ஷங்கர் !!

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ‘மாவீரன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் வரும் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். இதனை படக்குழு மூன்று நிமிட காமெடியான வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தில் அதிதி ஷங்கர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\