அடுத்த மாதம் (ஜூலை) வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!!

அடுத்த மாதம் (ஜூலை) வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!!

புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஜூலை 12 முதல் 16 வரை முதல் டெஸ்டும், ஜூலை 20 முதல் 24 வரை 2-வது டெஸ்ட்டும் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 1-ந்தேதியும், 20 ஓவர் ஆட்டங்கள் ஆகஸ்ட் 3, 6, 8, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது.

இந்திய நேரப்படி டெஸ்ட் போட்டிகள் இரவு 7.30 மணிக்கும், ஒருநாள் ஆட்டங்கள் இரவு 7 மணிக்கும், 20 ஓவர் போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது.

Leave a Reply