கைது என்று கூறியதும் நெஞ்சு வலிப்பதாக கூறி கதறி அழுத செந்தில் பாலாஜி… மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு வீடியோ …

கைது என்று கூறியதும் நெஞ்சு வலிப்பதாக கூறி கதறி அழுத செந்தில் பாலாஜி… மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு வீடியோ …

சென்னை;

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர்.

இந்நிலையில் துணை ராணுவத்தினர் நேற்று அவரது வீட்டில் குவிக்கப்பட்டனர். தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 20 மணி நேர விசாரணைக்கு பிறகு  செந்தில் பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது நெஞ்சுவலியால் கதறி அழுதார் செந்தில் பாலாஜி . மருத்துவர்களின் உதவியை கேட்டார்.

இதனையடுத்து ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.  ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ,எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், சேகர்பாபு ஆகியோர் மருத்துவமனைக்கு உடனடியாக வந்தனர். ஓமந்தூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு

Leave a Reply