கைதுக்கு நெஞ்சு வலி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சு வலி தான் வர வேண்டும்…சீமான் விமர்சனம்…

கைதுக்கு நெஞ்சு வலி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சு வலி தான் வர வேண்டும்…சீமான் விமர்சனம்…

சென்னை;

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்பொழுது இது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில்,

“அதிகாரத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவரவர்கள் வசதிக்குத்தான் அதை கையாளுவார்கள். முன்னாடி அதிமுக இருந்தபொழுது கலைஞரை எப்படி கைது செய்தார்கள் என்பது தெரியும். சிதம்பரம் வீடேறி கைது செய்யப்பட்டது என்பதை எல்லாம் நாம் பார்க்கிறோம்.

இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது என்ன செய்கிறார்களோ அதையேதான் அவர்கள் அதிகாரத்திற்கு வரும்பொழுது செய்கிறார்கள். கைது என்றவுடன் நெஞ்சு வலி வருவதெல்லாம் நிறைய சினிமா படத்தில் பார்த்திருக்கிறோம்.

கைதுக்கு நெஞ்சு வலி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சு வலிதான் வர வேண்டும் என்றார்.

Leave a Reply