கண் திறக்க முடியாமல் சுயநினைவு இல்லாமல் படுத்திருப்பதாக அமைச்சர்கள் கூறியிருந்த நிலையில் மருத்துவமனைக்கு நேரில் முதல்வர் வந்ததும் எழுந்து உட்கார்ந்த செந்தில் பாலாஜி..

சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தனக்கு நெஞ்சுவலிக்கிறது என்று செந்தில்பாலாஜி கோரி கண்ணீர் விட்டு கதறிய நிலையில் அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் , கே.என். நேரு , சேகர்பாபு உள்ளிட்டோர் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்து சென்றனர்.
செந்தில் பாலாஜி கண்களை கூட திறக்க முடியாத நிலையில் சுயநினைவு அற்று படுத்திருப்பதாக அமைச்சர்கள் பலரும் செய்தியாளர்களிடம் கூறினர்.
இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் தள்ளி வைத்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்தார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியின் தோளை தொட்டு ஆறுதலாக பேசினார்.
முதல்வர் நேரில் வந்ததை பார்த்த செந்தில் பாலாஜி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து பேசினார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி கண்களை கூட திறக்க முடியாத நிலையில் சுயநினைவு அற்று படுத்திருப்பதாக அமைச்சர்கள் பலரும் கூறி இருந்த நிலையில் முதல்வர் வந்ததும் எழுந்து அமர்ந்து செந்தில்பாலாஜி பேசி இருப்பது அமைச்சர்கள் கூறியது அனைத்தும் பொய்யா என பொதுமக்கள் பேசி வருகின்றனர்..