சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை  வேட்டை நாய்கள் என விமர்சித்த ஜவாஹிருல்லா..

சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை  வேட்டை நாய்கள் என விமர்சித்த ஜவாஹிருல்லா..

சென்னை;

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அத்துடன் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

இதை தொடர்ந்து இன்று அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்ற போது  செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா  தனது ட்விட்டர் பக்கத்தில் ,

 “அரசியல் எதிரிகள் மீது அமலாக்கத்துறை சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை வேட்டைநாய்களைப் போல ஏவி விடுவது ஒன்றிய பாஜக அரசின் வழக்கமாக இருந்துவருகிறது. அதன் ஓர் அங்கமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்

. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கைது நடவடிக்கையும், தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதேச்சதிகாரத்தின் உச்சமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Leave a Reply