கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரம்!!

கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரம்!!

கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் போன்ற விஷயங்களில் உப்பு, மிளகு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. எவரையும் வசியம் செய்யும் சக்தி இந்தக் கல் உப்பு மற்றும் மிளகிற்கு நிச்சயம் உண்டு.

ஒருவரை வசியம் செய்யவும், அவரை நம் வசப்படுத்திக் கொள்ளவும், நம்மீது அன்பு பெருக செய்யவும் உப்பு, மிளகு சிறந்த பரிகாரமாக உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நாள், நட்சத்திரம், நேரம், காலம் எல்லாம் ஒன்றும் கிடையாது.

கணவன், மனைவிக்குள் இருக்கும் தீராத சண்டை, சச்சரவுகள் தீர்வதற்கு ஒருவரை ஒருவர் முதலில் அமைதியான நிலையில் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். சண்டையை தீர்த்துக் கொள்ள முடிவு எடுத்துவிட்டால் எவ்வளவு சண்டை, சச்சரவுகள், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் மனோதிடமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களால் முடிந்த நேரத்தில் நீங்கள் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். குண்டு குண்டாக இருக்கும் 27 மிளகுகள் மற்றும் இருபத்தி ஏழு கல் உப்புகளை எண்ணி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கணவன் மனைவி இடையே சண்டை தீர வேண்டும் என்று மனதார நினைத்துக்கொண்டு கண்ணாடி டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரில் முதலில் ஒவ்வொரு கல் உப்பையும் எடுத்து போட்டு கொண்டே வர வேண்டும்.

எல்லா மிளகு மற்றும் கல் உப்புகளையும் போட்டு முடித்த பின்பு நீங்கள் மனதார உங்கள் பிரச்சனையை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். என்னுடைய கணவன் அல்லது மனைவி என் மேல் மீண்டும் பழைய அன்புடன் அதே போல இருக்க வேண்டும்.

எல்லோரையும் போல நாங்களும் ஒருமித்த தம்பதிகளாக வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்ட பின் கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அப்படியே ஓடும் தண்ணீரில் கரைத்து விடுங்கள். நீர் நிலைகள் இல்லாத பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் சிங்கிள் கொட்டி விடலாம்.

அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்த கொஞ்ச நாட்களிலேயே உங்களுக்கு நிச்சயம் நல்லதொரு மாற்றம் தெரியும்.

Leave a Reply