சத்தம் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து அதற்கு எதிர்வினையாற்றும் ஒரு குழந்தை!!

சத்தம் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து அதற்கு எதிர்வினையாற்றும் ஒரு குழந்தை!!

சத்தம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது. சத்தம் பிடிக்கவில்லை என்பதை உணர்து அதற்கு எதிர்வினையாற்றும் ஒரு குழந்தை செய்யும் செயல் இணையத்தினை கலக்கும் வீடியோவாக தற்போது மாறியுள்ளது. குழந்தையின் க்யூட்டான ரியாக்‌ஷன் பலரையும் கவர்ந்துள்ளது.

இணையம் வளர்ந்த பிறகு உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நடக்கும் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் அனைத்தும் கண்ணிமைக்கும் உலகம் முழுவதும் வைரலாகி விடுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வகையில் இணையத்தில் தற்போது மிகவும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் உள்ளன.

அதில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருக்கிறது. அழும் குழந்தை எழுப்பும் ஓசையினைக் கேட்டு திகைத்து தனது இரண்டு கைகளையும் தனது இரண்டு காதுகளில் வைத்து மூடிக்கொண்டு இருக்கிறது. அதோடு மட்டுமிலாமல், அந்த குழந்தை ஏன் இப்படி அழுகிறான் என்பதைப் போல தனது இரண்டு கண்களையும் நன்கு விரித்து தான் அதிர்ச்சி அடைந்ததை முக பாவணையில் வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பலரும் குழந்தையின் ரியேக்‌ஷன் மிகவும் அழகாகவும், க்யூட்டாகவும் இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கன்வே குழந்தை ஒன்றிற்கு அம்மா போல் ஃபோட்டோவை ஒட்டி புட்டிப்பால் கொடுத்து மாட்டிக் கொண்ட ஒருவரின் வீடியோ இணையத்தினை கலக்கி வரும் நிலையில், தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மிகவும் வித்தியாசமான மற்றும் வைரல் வீடியோக்களை டான்சிங் ஹோம் எனும் இன்ஸ்டாகிராம் பக்கம் தொடர்ந்து தங்களது பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

dinaparavai

Leave a Reply