ஜிவி பிரகாஷ் குரலில் வெளியான “ஒரு சின்ன பறவை” பாடலை வெளியிட்ட படக்குழு !!

ஜிவி பிரகாஷ் குரலில் வெளியான “ஒரு சின்ன பறவை” பாடலை வெளியிட்ட படக்குழு !!

இயக்குனர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “அழகிய கண்ணே”. இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

மேலும் சிங்கம்புலி, ராஜ்கபூர், காதல் சுகுமார், ஆன்டிருவ்ஸ், அமுதவானன் உள்ளிட்ட பலர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்க என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் “அழகிய கண்ணே” படத்தில் இடம்பெற்றுள்ள “ஒரு சின்ன பறவை” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குரலில் வெளியான இந்த பாடல் லைக்குகளை குவித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply