உடல் பருமனை தடுக்க உதவும் சீஸ்!!

உடல் பருமனை தடுக்க உதவும் சீஸ்!!

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களால் சீஸ் தயாரிப்பது 8000 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது. சீஸ் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சீஸில் அதிகளவு கொழுப்பு இருப்பது உண்மையாக இருந்தாலும் இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. சீஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-12, வைட்டமின் கே, துத்தநாகம், கால்சியம், வைட்டமின் டி, கலோரிகள், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, சர்க்கரை, சோடியம் இப்படிப் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி காணப்படுகிறது.

சீஸ் எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. சீஸில் காணப்படக்கூடிய கால்சியம் மற்றும் புரதம் எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக உருவாக்க உதவுகிறது. சீஸ் பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கால்சியமும் நிரம்பி காணப்படுகிறது. கால்சியம் எலும்புகள் வலுவாக வளர உதவுவதோடு விரைவில் வயதாகும் தன்மையையும் குறைக்கும்.

மேலும் சீஸிஸ் உள்ள வைட்டமின்கள் ஏ, டி, கே மற்றும் துத்தநாகம் ஆகியவை எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சீஸில் லினோலிக் அமிலம் உள்ளது. இது உடலில் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதயநோய் மற்றும் உடல் பருமனை தடுக்கவும் உதவுகிறது. சீஸ் போன்ற பால் பொருட்களில் இருக்கக்கூடிய கால்சியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

சீஸில் ப்ரோபயாடிக் பாக்டீரியாக்கள் காணப்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் கொலஸ்ட்ரால் அளவை சரியான அளவில் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது சீஸ். இது உடலின் சரியான செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது.

மேலும் இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் நம்முடைய இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சீஸில் இயற்கையான கொழுப்புகள் அதிகம் உள்ளது.

இது உங்களுடைய உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரு சில சீஸ் வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. இதில் இருக்கக்கூடிய கொழுப்பு, கால்சியம், புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உங்களுடைய தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துவதோடு வளர்சிதை மாற்றத்தையும் சீராக்குகிறது.

சரியான அளவில் சீஸ் எடுத்துக் கொள்ளும் பொழுது இது உங்களுடைய உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. சீஸ் பற்களை பாதுகாக்கிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இரண்டும் ஆரோக்கியமான பற்களுக்கு முக்கியம். சீஸில் இருக்கக்கூடிய மற்ற தாதுக்கள் பற்களின் வலிமையையும் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துகிறது.

சீஸ் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. நம்முடைய உடலில் மிகவும் சிக்கலான பகுதி மூளை.

அதனால் மூளை மிகவும் ஆரோக்கியமாக இருப்பது முக்கியமானது. ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு நீங்கள் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கக்கூடிய கொழுப்புகள் உதவுகிறது. ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சீஸ் உங்களுடைய மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஒரு சிலருக்கு சீஸில் உள்ள கேசீன் என்ற புரதத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமை எதிர்வினை உடல் முழுவதும் வீக்கம், தடிப்புகள், முகப்பரு, தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இப்படிப்பட்ட பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்பட்டால் சீஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சீஸ் குறைவாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது மட்டுமே இந்த ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். அது தவிர்த்து அதிக அளவு சீஸை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அது பல்வேறு உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் சீஸை எடுத்துக் கொள்ளும் போது மிக கவனமாக அளவோடு எடுத்துக் கொள்வது சிறந்தது.

Leave a Reply