ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இரத்தக் கொடையாளர் தினம் அனுசரிக்கப்பட்டது…

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இரத்தக் கொடையாளர் தினம் அனுசரிக்கப்பட்டது…

கோவை :

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் . க. மாதேஸ்வரன் அவர்களின்  தலைமையில், மருத்துவ இயக்குனர் டாக்டர். பரந்தாமன் சேதுபதி அவர்கள், ராயல் கேர் இரத்த நிலையத்தில் இரத்தம் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய தன்னார்வ இரத்தக் கொடையாளர்களை பாராட்டி கௌரவப்படுத்தினார்.

விழாவில்

இரத்தம் கொடுங்கள்,
பிளாசுமா கொடுங்கள்,
வாழ்வு கொடுங்கள்,
அடிக்கடி கொடுங்கள் என்ற கரு வலியுறுத்தப்பட்டது .

விழாவில் வாழ்நாள்   சாதனையாளர் விருது, 158 முறை இரத்த தானம் செய்த “திரு. அருண் கோகுல்தாஸ்” அவர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் இரத்த தான   ஊக்குவிப்பாளர்  கோவை அக்க்ஷித் பவுண்டேஷன்
திரு. K.K.ரவி. அவர்களுக்கும் விருது  வழங்கப்பட்டது.

விழாவை மருத்துவ ஆய்வகம் மற்றும் ரத்த வங்கி தலைவர்
டாக்டர். ப. சின்னசாமி மற்றும் குருதியேற்றல் துறைத் தலைவர்
டாக்டர்.ரா. ஜீவப்பிரியா அவர்களும் சிறப்பான முறையில் நடத்தினர்.

விழாவில் தன்னார்வ குருதி கொடையாளர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply