கைது செய்யபடுவோம் என தெரிந்தே ஆவணங்களில் கையெழுத்திட மறுத்தார் செந்தில் பாலாஜி… அமலாக்கதுறை தகவல்….

கைது செய்யபடுவோம் என தெரிந்தே ஆவணங்களில் கையெழுத்திட மறுத்தார் செந்தில் பாலாஜி… அமலாக்கதுறை தகவல்….

சென்னை ;

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக  இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதில் முறைகேடு செய்ததாக செந்தில் பாலாஜியின் அலுவலகம் மற்றும் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை அடிப்படையில் இன்று அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், உடல்நலக் குறைபாடு காரணமாக  சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு 3 அடைப்புகள் இருப்பதாகவும், இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை இயக்குனர் பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியை எதிர்வரும் 28ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதையயடுத்து,  இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அமைச்சர் சார்பில் வாதாடிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர் இளங்கோ, இந்த கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட நடவடிக்கை என்றும், மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவோ மேற்கொள்ளப்பதாகவும் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை விதி மீறல்கள் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி வழக்கறிஞர், மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும், நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் வாதிட்டார். மேலும், மனைவியிடம் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியபடுத்த வேண்டும் அதை செய்யவில்லை என்றும் கூறினார்.

அமலாக்கதுறை சார்பில் நீதிபதி ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் வாதாடினார். விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும்,  கைது காரணங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டன என்றும் தெரிவித்தார்.

கைது செய்யப்படுவோம் என தெரிந்தே, கைது மெமோவை பெற அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்ததாக தெரிவித்தார்.  சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது (Criminal Procedure Code) என்றும்,  கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறல்கள் இல்லை என்றும் கூறினார்.

மேலும், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஜாமின் மனு மீதான உத்தரவை நாளைய தினம்  ஒத்திவைப்பதாக வைப்பதாக அறிவித்தார். மேலும், அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான விசாரணை நாளை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply