திமுக செய்தி தொடர்பாளராக இருந்தவர்தான் தற்போது செந்தில் பாலாஜியை விசாரித்து வரும் மனித உரிமை ஆணைய உறுப்பினர்….

திமுக செய்தி தொடர்பாளராக இருந்தவர்தான் தற்போது செந்தில் பாலாஜியை விசாரித்து வரும் மனித உரிமை ஆணைய உறுப்பினர்….

சென்னை;

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை அத்துமீறியதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

அந்த வகையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜியிடம் நடந்தவற்றை குறித்து விசாரித்துள்ளார்.

அதுகுறித்து கண்ணதாசன் கூறுகையில்,

அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். நாங்கள் அவரை சென்று பார்த்தபோது சோர்வாக காணப்பட்டார். தன்னைதாக்கியதாக சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி எங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நான் நேரில் சென்று விசாரித்தேன். தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த பின்பும் துன்புறுத்தியதாக செந்தில் பாலாஜி கூறினார். அவரை தரையில் போட்டு தரதரவென இழுத்தார்களாம். அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும்’ என கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

கண்ணதாசன் திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர். தொலைக்காட்சி விவாதங்களில் திமுக செய்தி தொடர்பாளராக பல விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர். கடந்த ஆண்டுதான் இவரை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக தமிழக அரசு நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அறிக்கை எப்படி இருக்கும் என்று தெரியாதா என்று பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர் .

Leave a Reply